தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக் ஷன் கதையை இயக்குகிறாரா வெங்கட் பிரபு?

செய்திப்பிரிவு

சுதா ​கொங்​கரா இயக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் நடித்​துள்ள ‘பராசக்​தி’ படம் பொங்​கலுக்கு வெளி​யாக இருக்​கிறது. இதையடுத்து அவர் வெங்​கட் பிரபு இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதில் அவர் வித்​தி​யாச​மான தோற்​றத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​காகப் படக்​குழு தற்​போது அமெரிக்கா சென்​றுள்​ளது. அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்​றத்தை வடிவ​மைக் ​கின்​றனர். வெங்​கட் பிரபு இயக்​கத்​தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்​தி​லும் விஜய்​யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்​கா​வில் தான் வடிவ​மைத்​தனர்.

அதே இடத்​துக்​கு, சிவ​கார்த்​தி​கேயனின் தோற்​றத்தை ஸ்கேன் செய்ய இப்போது சென்​றுள்​ளார். அதனால் இது சயின்ஸ் பிக் ஷன் மற்​றும் டைம் ட்ராவல் கதையை கொண்ட படமாக இருக்​கும் என்று கூறி வரு​கின்​றனர். அதை தற்​போது வெங்​கட் பிரபு​வும் உறுதி செய்​துள்​ளார்.

தனது இன்​ஸ்​டா கி​ராம் பக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் அமெரிக்​க ஸ்டூடியோ ஒன்​றில் நிற்​கும் புகைப்​படத்​தைப் பதி​விட்​டுள்ள அவர், ‘எதிர்காலம் இங்​கே’ என்று கேப்​ஷன் கொடுத்​துள்​ளார். இதையடுத்து டைம் டிராவல் கதை உறு​தி​தான் என்​றும் பொங்​கலுக்​குப் பிறகு இதன் படப்​பிடிப்பு தொடங்​கும் என்​றும் கூறி வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT