சாந்தாராம் ‘பயோபிக்’கில் தமன்னா - முதல் தோற்றம் வெளியீடு

சாந்தாராம் ‘பயோபிக்’கில் தமன்னா - முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் வி.சாந்தாராம். 1940 மற்றும் 1950-களில் பல இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களை இயக்கியுள்ள இவருக்கு ‘பர்சாயின்’, ‘ஆத்மி’, ‘சகுந்தலா’, ‘தோ ஆங்கேன் பாரஹாத்’, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ ஆகிய படங்கள் இந்திய அளவில் புகழைக் கொடுத்தன.

இவருடைய வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி ‘சித்ரபதி வி சாந்தாராம்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. சித்தாந்த் சதுர்வேதி, சாந்தாராமாக நடிக்கிறார்.

சாந்தாராமின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ-யாக தமன்னா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவருடைய முதல் தோற்றத்தை வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படத்தை அபிஜித் தேஷ்பாண்டே இயக்குகிறார்.

மவுனப்பட காலத்திலிருந்து இந்தியாவில் செல்வாக்குமிக்க இயக்குநராக இருந்த சாந்தாராமின் திரை அனுபவத்தை இந்தப் படம் விவரிக்கிறது. அவரைப் பற்றி இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இப்படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சாந்தாராம் ‘பயோபிக்’கில் தமன்னா - முதல் தோற்றம் வெளியீடு
Stranger Things 5 Vol 1: பரபரப்பை நோக்கி நகரும் இறுதிக்கட்டம் | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in