‘யாத்திசை’ தரணி ராசேந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ஜே.கமலக்கண்ணனின் ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். “பிரிட்டிஷ் ஆட்சி காலத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ (ஐஎன்ஏ) அதிகாரியாக நடித்துள்ளார். பீரியட் படம் என்பதால் கதையை மேலும் செழுமைப்படுத்த பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக் ஷன் நடந்து வருகின்றன” என்றது படக்குழு.