தமிழ் சினிமா

சந்தானத்தின் ‘லவ் பைட்’ டிச.18-ல் ரிலீஸ்

ப்ரியா

சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘லவ் பைட்’ படம் டிசம்பர் 18 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு இன்று (நவ.28) அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘ஸோம்பி பராக்... டிசம்பர் 18 முதல் ‘லவ் பைட்’ உலகெங்கும் கடிக்க தயாராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. இத்துடன் சந்தானம் ஸோம்பிகளுடன் ஒற்றைக்கை பலப்பரீட்சை நடத்தும் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஸோம்பி வகை நகைச்சுவைப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் சந்தானத்துடன் அபர்ணா ராஜ், ஆனந்த ராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லிம் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘லவ் பைட்’ படத்துக்கு இசை டியோ ஃபாக்ஸன் (பிரதீப் பி.ஜே. வேய்ன் பேவி). படத்தின் ஒளிப்பதிவை எஸ்.யுவாவும், படத்தொகுப்பை பிரதீப் ராகவ்வும் மேற்கொண்டுள்ளனர்.

அக்டோபர் மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடைததாக அறிவிக்கப்பட்டு, டிசம்பரில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிசம்பர் 18-ல் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT