சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, படம் ஒன்றிலும் கவின் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாஸ்டர் சாண்டி.
திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கென் ராய்சன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் கவின், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது கவின் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாஸ்டர் சாண்டி. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் – சாண்டி இருவரின் நட்பு பெரிதாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவின் படங்களுக்கு சாண்டி நடனம் அமைத்தபோதிலும், இருவரும் இணைந்து நடித்ததில்லை.
கவின் – சாண்டி இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக கென் ராய்சன் இயக்கும் படம் அமைந்துள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. ஃபேண்டஸி, காதல், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகும் இப்படத்துக்கு ஓஃப்ரோ இசையமைத்து வருகிறார். இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.