‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய குரு சரவணன் அடுத்து இயக்கும் படத்தில் சதீஷ், சாய் குமார் மகன் ஆதி ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஆதி சாய் குமார், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சரண்யா நாயகியாக நடிக்கிறார்.
சிங்கம்புலி, பிளாக் பாண்டி, சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர். எஸ்ஜிஎஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘பீஸ்ட்’, ‘லியோ’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கே.பாக்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது.