தமிழ் சினிமா

ரிஷி​காந்த் நடிக்​கும் ‘மொத ராத்திரி’

செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறு​வன​மான மைத்ரி மூவி மேக்​கர்​ஸ், தமிழில் தயாரிக்​கும் 3-வது படத்​துக்கு ‘மொத ராத்​திரி’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

ராஜா கருப்​ப​சாமி இயக்​கும் இந்​தப் படத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பக்​ஸ், அப்​துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்​கீதா பாலன், பானுபிரியா என பலர் நடிக்​கின்​றனர். சுரேந்​திரன் பரஞ்​சோதி ஒளிப்​ப​திவு செய்​கிறார். பரத் சங்​கர் இசை அமைக்​கிறார். இப்​படத்​தின் தலைப்பை இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜ் வெளி​யிட்​டார்.

“வழக்​கத்​துக்கு மாறான திரு​மணம், இரவு, அறி​முகமில்​லாத 2 நபர்​கள், ஆச்​சரி​யங்​கள், பல பொய்​கள் என ஓர் இரவு எல்​லா​வற்​றை​யும் மாற்​றுகிறது. அது​தான் படம். உணர்​வுப்​பூர்​வ​மான, என்​கேஜிங்​கான திரையரங்க அனுபவத்தை இப்​படம் நிச்​ச​யம் கொடுக்​கும்” என்​கிறார் இயக்​குநர்.

SCROLL FOR NEXT