ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜானி, சனுஷா, தீப்பெட்டி கணேசன், நிஷாந்த், தமிழ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் 2ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.
ஆர்.பன்னீர்செல்வம் இயக்கி, தயாரித்துள்ளார். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷமி திலகன், நிஷாந்த், கனிஃபா, தமிழ் செல்வம், சுந்தீப், வேல ராம மூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.