பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் காதல் கலந்த விளையாட்டு படத்துக்கு ‘ரீமேட்ச்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கேபிஒய் பாலா கதாநாயகனாக நடித்துள்ளார்.
தானு ஹர்ஷா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை. முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு, சந்தோஷ் பிரதாப், ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார்.
அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் ராதா மோகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.விமல் குமார் எழுதி இயக்குகிறார். ஸினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தினேஷ்ராஜ், பிரகாஷ் சேஷாத்ரி, ஜி. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னையில் நடை பெற்றது.
கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர்.கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.