தமிழ் சினிமா

‘அங்கீகாரம்’ கிடைத்தது! - ஆர்.ராஜேஷ்

செய்திப்பிரிவு

தமிழில் ‘அறம்’, ‘ஹீரோ’, ‘டாக்டர்’, ‘அயலான்’ போன்ற தரமான படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ஆர்.ராஜேஷ். அவர், கடுமையாக உழைத்து ஒரு தடகள வீரர் போலவே உருமாறி நாயகனாக நடித்திருந்த ‘அங்கீகாரம்’ படத்துக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருசேர வரவேற்புக் கொடுத்துள்ளனர்.

சமூகத்தின் அடித்தட்டிலிருந்து ஏழ்மையை மீறி எழுந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. தேசிய, சர்வதேசப் போட்டி களுக்குத் தேர்வுபெற்றாலும் அவர்களைக் கீழே தள்ள ஓர் அதிகாரக் கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்.

அப்படிக் கீழே தள்ளப்பட்ட ஒரு தேசியத் தடகள வீரன், தனியொருவனாக நீதிமன்றப் படியேறி வெல்வதை, ஓர் உண்மைக் கதையிலிருந்து திரைப்படம் ஆக்கியிருந்தார் ஜெ.பி.தென்பாதியான். பீட்டர் ஹெய்ன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ள இப்படம், ஜிப்ரான் இசையில், ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவில் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாதி முழுக்க வரும் நீதிமன்றக் காட்சிகள், அவற்றில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, சிலாகிக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT