தமிழ் சினிமா

‘ஜெயிலர் 2’ உடன் மோதும் ‘ரணபாலி’

நிலா

விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா மந்​தனா நடிக்​கும் படம் ‘ரண​பாலி’. 1850-களில் நடந்த உண்​மைச் சம்​பவங்​களை அடிப்​படை​யாகக் கொண்டு ராகுல் சங்​கிருத்​யன் இயக்​கி​யுள்​ளார். பல உண்​மைச் சான்​றுகள், வாய்​மொழி வரலாறுகளின் அடிப்​படை​யில் இப்​படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தில் ‘தி மம்​மி’ மூலம் பிரபல​மான அர்​னால்ட் வோஸ்​லூ, சர் தியோடோர் ஹெக்​டர் என்ற பிரிட்​டிஷ் அதி​காரி​யாக நடித்​துள்​ளார். இந்​தப் படம் செப்​.11-ல் வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் இதன் ரிலீஸ் மாற்​றப்​பட்​டுள்​ளது. அதன்​படி அக். 16-ல் வெளி​யாகிறது. ரஜினி​யின் ‘ஜெ​யிலர் 2’, அக்​.15-ம் தேதி​யும் தனுஷின் ‘ஓம்’ அக்​.16-ம் தேதி​யும் வெளி​யாக இருப்​ப​தால் கடுமை​யான பாக்ஸ் ஆபீஸ் போட்டி இருக்​கும் என்று கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT