தமிழ் சினிமா

ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

செய்திப்பிரிவு

நாங்கள் தயாரிக்கும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜென்டுகளையும் நியமிக்கவில்லை என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் பெயரில் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறியும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜென்டுகளையும் நியமிக்க வில்லை. நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம். எங்கள் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT