கெளதம் ராம் கார்த்திக் நடித்துள்ள ‘ROOT’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினி வெளியிட்டுள்ளார்.
வெர்சஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ROOT – Running Out of Time’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் முதல் பார்வை மற்றும் சில காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டினார். இப்படம் பெரும் வெற்றி பெற படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் கெளதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம் ‘ROOT – Running Out of Time’. ‘கோச்சடையான்’ படத்தின் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் சூரியபிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது. ’ROOT’ படத்தில் அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, ஒய்.ஜி. மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவியல் கலந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒளிப்பதிவாளராக அர்ஜுன் ராஜா, இசையமைப்பாளராக அரன் ரே ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.