‘சிறை’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்கே அக்ஷய் குமார், அடுத்து ‘ராவடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இன்னொரு கதாநாயகனாக மலையாள நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப், நடித்திருக்கிறார். இப்படம் டிச.24-ல் வெளியாகிறது. இதை அடுத்து அக் ஷய் குமார் நடிக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கிறார். எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஹெச்.வினோத்திடம் பணியாற்றிய விஷ்ணு அமரன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கும் இப்படத்துக்கு சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
“வெவ்வேறு களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் க்ரைம் டிராமா படமான இது, பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்” என்கிறது படக்குழு.