தமிழ் சினிமா

வரு​வாய் பகிர்வு ஊதி​யத்தை வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்​தம்

செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கம் சார்​பில், ஒரு நாள் வேலை நிறுத்​தம் நேற்று நடை​பெற்​றது. மீடி​யம் மற்​றும் பெரிய பட்​ஜெட் படங்​களுக்கு நடிகர்​கள் வரு​வாய் பகிர்வு அடிப்​படை​யில் சம்​பளத்​தைப் பெற வேண்​டும் என்று தமிழ்த்​திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதுகுறித்த கவனத்தை ஈர்க்க மே 2-ம் தேதி ஒரு நாள் அடை​யாள வேலை நிறுத்​தம் நடை​பெறும் என்​றும் அறிவிக்கப்பட்டது. தென்னிந்​திய நடிகர் சங்​கம் வேலை நிறுத்​தத்​தைக் கைவிட வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யது.

ஆனால், அறி​வித்​த​படி, தயாரிப்​பாளர்​கள் சங்​கம் சார்​பில் நேற்று வேலை நிறுத்​தம் நடை​பெற்​றது. இதனால் உள்​ளூர் மற்​றும் வெளியூர்​களில் நடித்த சுமார் 30-க்​கும் மேற்​பட்ட படப்​பிடிப்​பு​கள் பாதிக்​கப்​பட்​டன. இதனால் பல கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்​ளது.

இது குறித்து அறிக்கை வெளி​யிட்​டுள்ள தயாரிப்​பாளர் சங்​கம், “தயாரிப்​பாளர்​களின் லாப நஷ்டங்​களில் நடிகர்​கள் பங்கு கொள்ள வேண்​டும் என்று கடந்த 3 ஆண்டு கால​மாக நடிகர் சங்​கத்​துக்கு நேரிலும், கடிதம் மூல​மாக​வும் பலமுறை தெரி​வித்​துள்​ளோம். அவர்​கள் இது​நாள் வரை​யில் எந்​த​வித​மான நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ளாமல் இருந்து வரு​கிறார்​கள். எனவே திரைத்​துறை​யில் உள்ள அனை​வரின் கவனத்​துக்​கும் கொண்டு சேர்க்​கும் வகை​யில் ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்​தம் செய்​வது என்று பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

இந்த அடை​யாள வேலை நிறுத்​தத்​துக்கு ஒத்​துழைப்பு நல்​கிய தென்​னிந்​தி​யத் திரைப்பட தொழிலா​ளர்​கள் சம்​மேளன தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி மற்​றும், நிர்​வாகி​கள் மற்​றும் அனைத்து தொழிலா​ளர்​களுக்​கும் தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் சார்​பில் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்” என்று கூறப்​பட்​டுள்​ளது. வேலை நிறுத்தம் காரண​மாக திரைப்​படம் தொடர்​பான எந்த வேலைகளும் நேற்று நடை​பெற​வில்​லை.

SCROLL FOR NEXT