தமிழ் சினிமா

இளை​ய​ராஜா​வின் அண்​ணன் தயாரிப்​பாளர் ஆர்.டி.​பாஸ்​கர் மகன் ஹீரோ​வாக அறிமுகம்

நிலா

இளை​ய​ராஜா​வின் மூத்த அண்​ணனும், தயாரிப்​பாள​ரு​மான ஆர்.டி.​பாஸ்​கரின் மகன் ஜெயன் ஹீரோ​வாக அறி​முக​மாகும் படம், ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’.

காதல் மற்​றும் இசைக்கு முக்​கி​யத்துவம் கொடுத்து உரு​வாகும் இப்​படத்தை சுஜித் என் சுப்​ரமணி​யம் திரைக்​கதை எழுதி இயக்குகிறார். இவர் ‘குடும்​பஸ்​தன்’ படத்​தின் ஒளிப்​ப​தி​வாளர். இப்​படத்​தில் சோனா ஒலிக்​கல், வாகை சந்​திரசேகர், குரு சோம சுந்​தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்​சுமி உள்​ளிட்ட பலர் நடிக்கின்​றனர். சாய் முனீஷ் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

எலிபென்​டைன் எக்ஸ் நிறு​வனம் சார்​பில் ரமணன் பால​கங்​காதரன் தயாரிக்​கிறார். தன் தம்​பிக்​காக இயக்​குநர் வெங்​கட் பிரபு, கதை எழு​தி​யுள்​ளார். யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்கிறார். இயக்​குநர் சுதா கொங்​கரா கிரியேட்​டிவ் புரொடியூச​ராக இணைந்​துள்​ளார். இவர்​கள் நட்​புக்​காக இணைந்துள்​ள​தாகப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

தயாரிப்​பாளர் ரமணன் பால​கங்​காதரன் கூறும்​போது, “ஜெயனை அறி​முகப்​படுத்​து​வ​தில் பெரு​ மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் சினிமா​வில் ஓர் அழுத்​த​மான இசைத் தொடர்​பான கதைகள் வந்து நீண்ட நாட்​களாகி ​விட்​டன. அந்த குறையை இப்​படம் போக்கும்” என்​றார்.

SCROLL FOR NEXT