தமிழ் சினிமா

சூர்யா 46 படத்தின் கதை என்ன? - தயாரிப்பாளர் விளக்கம்

செய்திப்பிரிவு

‘பிரேமலு’ படம் மூலம் பிரபல​மானவர் மலை​யாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ‘ரெபல்’, ‘டியூட்’ படங்களில் நடித்த இவர்​ ,​‘ஜன​நாயகன்’ படத்​தில் நடித்​துள்​ளார்.

வெங்கி அட்​லூரி இயக்​கத்​தில் சூர்யா ஹீரோ​வாக நடித்​துள்ள அவருடைய 46-வது படத்​தி​லும் மமிதா பைஜு நடித்​துள்​ளார். இதில் அவர், சூர்​யா​வின் சகோ​தரி​யாக நடிப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன. இந்​நிலை​யில் அவர்​களின் கதா​பாத்​திரங்​கள் குறித்து தயாரிப்​பாளர் நாக வம்சி தெரி​வித்​துள்​ளார்.

இப்​படத்​தின் கதை பற்றி அவர் கூறும்​போது, “சூர்யா 46 படத்​தின் கதை, 45 வயதுடைய ஒரு ஆணுக்​கும் 20 வயது​கொண்ட பெண்​ணுக்​கு​மான உறவைப் பற்​றியது. சூர்யா கேரக்​டர், கஜினி படத்​தின் ஃபிளாஷ்பேக்​-கில் வரும் சஞ்​சய் ராம​சாமி​யின் கதா​பாத்​திரத்​தைப் போன்று இருக்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார். இதனால் ரசிகர்​கள், அவர்​கள் காதலர்​களாகத்​தான் நடித்​துள்​ளனர் என்று சமூக வலை​தளங்​களில் கூறி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT