தமிழ் சினிமா

“எனக்கு எதிராக எதிர்மறை பிரச்சாரம்” - பிரியங்கா மோகன் வேதனை

ஸ்டார்க்கர்

சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எதிர்மறை பிரச்சாரம் செய்யப்படுவதற்கு பிரியங்கா மோகன் வேதனை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பிரியங்கா மோகன் அளித்துள்ள பேட்டியில் தனக்கு எதிராக பரப்பப்படும் சூழ்ச்சிகள் குறித்து பேசியிருக்கிறார்.

          

பிரியங்கா மோகன் அளித்த பேட்டியொன்றில் “உங்களுக்கு எதிராக எதிர்மறை பிரச்சாரம் செய்யப்படுவது உண்மையா” என்ற கேள்விக்கு, “நான் ஆம் என்று கூறுவேன், பிரச்சாரம் என்பது ஒரு பெரிய வார்த்தை. ஆனால் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன, கடந்த காலத்தில் நடந்ததை பற்றி சிந்திக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு நிச்சயமற்ற தொழில் என்பதை புரிந்துக் கொண்டேன்.

என்னைப் பற்றி வரும் சில மீம்ஸ்கள் இயல்பாக உருவாக்கப்படுவை அல்ல. அதனை திட்டமிட்டு பணம் கொடுத்து பதிவு செய்ய சொல்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் சமாளிக்க கற்றுக் கொண்டேன். அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தி வருகிறேன். திரையுலகில் யாருக்கும் எதுவும் நடக்கலாம். நிச்சயமாக அவை எனக்கு வலிக்கிறது. ஆனால் அவைவே எனக்கு எழுச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.

SCROLL FOR NEXT