தமிழ் சினிமா

பிரபுதேவா - வடிவேலு கூட்டணியின் ‘பேங் பேங்’ ஒன்லைன் என்ன?

செய்திப்பிரிவு

பிரபுதேவா நாயகனாக நடித்து வெளியான மூன்றாவது படம் ‘ராசய்யா’ (1995). அந்தப் படத்தில் தொடங்கி பிரபுதேவா - வடிவேலு கூட்டணி கடந்த 30 ஆண்டுகளாகப் பல படங்களில் தொடர்ந்துவருகிறது.

தற்போது இக்கூட்டணி, அதிரடி ‘ஸாம்பி ஆக்‌ஷன்’ படமாக வெளியாகவிருக்கும் ‘பேங் பேங்’ படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தீவு ஒன்றுக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்படும் பெருந்தொற்றால் அங்கு வாழும் மனிதர்கள் ஸாம்பிகளாக மாறிவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து உயிர்பிழைக்க, பிரபுதேவாவும் வடிவேலுவும் தொற்றுக்கு ஆளான அத்தீவின் கடைசி மனிதன்வரை வேட்டையாடுவதுதான் கதை.

சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியுடன் பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி ஆகியோர் ஆக்‌ஷன் ‘கேங்’ ஆக இணைந்துகொள்கிறார்கள்.

ஹெச்.சி.வேணு, விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தை கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார். படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT