நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா இப்போது ‘மூன்வாக்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தியில், சல்மான் கான், அக் ஷய்குமார் நடித்த சில படங்களை இயக்கினார். தொடர்ந்து அங்கு படங்கள் இயக்கி வந்தார்.
இதனால் தெற்கு மும்பையில் மகாலஷ்மி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு பிளாட்களை கடந்த 2012-ம் ஆண்டு வாங்கியிருந்தார். 33 மற்றும் 34-வது மாடிகளில் இருந்த அந்த வீடுகளை இப்போது அவர் ரூ.14.80 கோடிக்கு விற்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பத்திரப்பதிவு மார்ச் 13-ம் தேதி நடந்துள்ளது.