தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், ‘பாக்கெட் நாவல்’. இதில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.
நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதியுள்ளார். டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் வெளியாக இருக்கிறது. இதை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.