சென்னை: சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘பிக்காசோ’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கன்னட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், பட்டாசுகளின் நடுவே குறும்புத்தனமான தோற்றத்தில் அமர்ந்துள்ளனர்.
இப்படத்தில் ஷிவானி நாகரம் நாயகியாக நடிக்கிறார். மேலும் யோகலட்சுமி, பாடகர் கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவையும், சுரேஷ் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.
'பிக்காசோ' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.