திரைத் தெறிப்புகள்: மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி முதல் சூரி பாராட்டு வரை

திரைத் தெறிப்புகள்: மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி முதல்  சூரி பாராட்டு வரை
Updated on
2 min read

த்ரிஷாவின் வாழ்த்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த மாளவிகா மோகனன் முதல் சூரியின் பாராட்டுகள் வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இது.

>> விஜய் சாருடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானதும், “ஹாய் பேபி. உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகப்பெரிய வாய்ப்பு. வாழ்த்துகள்” என த்ரிஷா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். இதைச் சொல்வதற்கு நல்ல மனது வேண்டும் என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

>> மாரி செல்வராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் ‘மஞ்சணத்தி’ படத்தை இயக்குகிறார்.  இளையராஜா இசையில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

>> தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111-வது படமான ‘தாதா’ டிசம்பர் 24-ல் வெளியாகிறது. கோபிசந்த் மல்லினேனி இயக்கும் இப்படத்தில், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

>> மம்மூட்டியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரே தயாரித்து நடித்துவரும் புதிய படத்திற்கு ‘மேளா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1980-ல் வெளிவந்த பழைய ‘மேளா’ படத்திலும் மம்மூட்டி கலக்கி இருக்கிறார்.

>> இயக்குநர் மணிரத்னம் ‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - சாய் பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக கருவாகும் இப்படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயர் வைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

>> நடிகர் ராமராஜன் ‘கடவுள் தந்த பரிசு’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் காசிமாயன் இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இது ராமராஜன் - இளையராஜா கூட்டணிக்கு 25-வது படம்.

>> நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தில் பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

>> சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்த்து குழந்தைகள் முதல் அனைவரும் அரசியல் பேசுவது ஆரோக்கியமான விஷயம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

திரைத் தெறிப்புகள்: மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி முதல்  சூரி பாராட்டு வரை
மணிரத்னம் படத் தலைப்பு ‘இஞ்சி வெல்லம்’ - முதல் தோற்றமும் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in