தமிழ் சினிமா

‘நல்ல படங்​களை மக்​கள் ஆதரிப்பார்​கள்’ - தனஞ்​செயன்

செய்திப்பிரிவு

சந்​தோஷ் பிர​தாப், தீப்​ஷிக்​ஹா, மாஸ்​டர் சஷாந்த், அரி​மா, மஹித்​ரா, கலைக்​கோ, தம்பி ராமை​யா, ஜெகன், சம்​பத் ராம் என பலர் நடித்​துள்ள படம்​, ‘மரகத மலை’.

எல்​.ஜி.மூ​விஸ் சார்​பில் எஸ்​.லதா தயாரித்​து, எழு​தி, இயக்​கி​யுள்ள இப்​படம் ஃபேன்​டஸி டிராமா கதையை கொண்​டது. எல்​.​வி.​முத்து கணேஷ் இசை அமைத்​துள்​ளார்.

பி.ஜி.​முத்​தையா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். குழந்​தைகளை மகிழ்விக்​கும் வகை​யில் உருவாகியுள்ள இப்​படத்​தின் இசை மற்​றும் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்டனர்.

          

தயாரிப்​பாளர் தனஞ்​செயன் பேசும்​போது, “கதை, திரைக்​கதை, வசனம், பாடல்​கள், இயக்​கம் என அனைத்​தை​யும் லதா செய்திருப்​பது பாராட்​டத்​தக்​கது, சிறப்​பான முயற்​சி. இந்த படத்தில் சந்​தோஷ் பிர​தாப் முக்​கிய பங்​களிப்பு செய்​துள்​ளார். அனிமேஷன் மற்​றும் கிராபிக்ஸ் காட்​சிகள் அழகாக உருவாக்கப்பட்​டுள்​ளன.

தமிழ் சினிமா தற்​போது சவால்​களைச் சந்​தித்​தா​லும், நல்ல படங்கள் வந்​தால் மக்​கள் கண்​டிப்​பாக ஆதரிப்​பார்​கள். சிறந்த கதை​யுடன் படங்​களை உரு​வாக்​கி​னால் வெற்றி நிச்​ச​யம் கிடைக்கும். தமிழ் சினி​மா​வில் ஒவ்​வொரு மாத​மும் நல்ல படம் வந்து ஜெயித்​துக் கொண்டு இருக்​கிறது” என்​றார். ஏப்​.3-ம் தேதி படம் வெளி​யாகிறது.

SCROLL FOR NEXT