ரஜினிகாந்த்தின் 50-வது வருட பொன் விழாவைக் கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிச.12ம் தேதி அவர் நடித்த ‘படையப்பா’ திரைப்படம், டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாகிறது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படம் 1999-ம் வெளியானது. இதில் ரஜினியுடன் இணைந்து சிவாஜிகணேசன் நடித்திருந்தார். சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் என பலர் நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.சத்திய நாராயணா, எம்.வி கிருஷ்ணா ராவ், கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி.எல்.தேனப்பன் பணியாற்றினார்.
அன்றைய காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து ஓடியது இப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிச.12ம் தேதி மீண்டும் வெளியாகிறது.