ரசிகரிடம் மன்​னிப்​புக் கேட்​டார் சூரி

ரசிகரிடம் மன்​னிப்​புக் கேட்​டார் சூரி
Updated on
1 min read

நடிகர் சூரி, இப்​போது ‘மண்​டாடி’ என்ற படத்​தில் நடித்து வருகிறார். மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இதில் மஹிமா நம்பியார், சத்​ய​ராஜ், சுஹாஸ், ரவீந்திரா விஜய், அச்​யுத் குமார், சாச்​சனா நமி​தாஸ் உள்பட பலர் நடிக்​கின்​றனர்.

ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைக்​கிறார். மீனவர்​களின் படகு ரேஸை மைய​மாக வைத்து உரு​வாகும் இப்​படத்தை ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெ​யின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கிறார்.

இந்​நிலை​யில், எக்ஸ் தளத்​தில் ரசிகர் ஒரு​வர், நடிகர் சூரியை டேக் செய்​து, “உங்​கள் பட ஷூட்​டிங் எங்​கள் ஊரில் நடப்​பது மகிழ்ச்​சி. இரவு நேர படப்​பிடிப்​பில் வேடிக்கை பார்க்க வரும் எங்​கள் பகுதி மக்களிடம், உங்​கள் பவுன்​சர்​கள் கொஞ்​சம் கடுமை​யாக நடந்து கொள்​கிறார்​கள்” என்று கூறி​யிருந்​தார்.

இதற்​குப் பதிலளித்​துள்ள சூரி, “உங்​கள் அன்​புக்​கும் ஆதர​வுக்​கும் நன்​றி. படப்​பிடிப்​பில் ஏற்​பட்ட தவறுக்கு மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறோம். இதைத் தயாரிப்​புக் குழு​விட​மும், பவுன்​சர் சகோ​தரர்​களிட​மும் தெரி​வித்து மிகுந்த கவனத்​துடன் இருக்​கச் சொல்கிறோம்.

எப்​போதும் போல உங்​கள் அன்பே எங்​களுக்கு பலம்” என்று பதிவிட்​டுள்​ளார். சூரி​யின் இந்த பண்பை சமூக வலை​தளத்​தில் ரசிகர்​கள் பாராட்டி வரு​கின்​றனர்.

ரசிகரிடம் மன்​னிப்​புக் கேட்​டார் சூரி
‘வாரணாசி’ டிஜிட்​டல் உரிமை ரூ.1000 கோடி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in