பராசக்தி...

 
தமிழ் சினிமா

ஓவர்​-​தி-ஷோல்​டர் ஷாட் (OTS): திரைமொழி​யின் உளவியல் ஊடுரு​வல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 21

சி.ஜெ.ராஜ்குமார்

சினிமா உலகில் ஒடிஎஸ் (OTS) ஷாட் என்​பது பார்​வை​யாளர்​களைக் காட்​சிக்​குள் அமர வைக்​கும் நுட்​ப​மான ஆயுதம். ஒரு கதா​பாத்​திரத்​தின் தோளுக்​குப் பின்​னிருந்து கேமரா மற்​றவரைப் பார்க்​கும் போது, நாம் வெறும் சாட்சிகளாக இல்​லாமல், அந்த உரை​யாடலின் ஓர் அங்​க​மாகவே மாறுகிறோம்.

முப்பரி​மாண ஆழமும் காட்சி மாயை​யும் (டெப்த் ஆஃப் ஃபீல்ட்)

ஒடிஎஸ் ஷாட்​டின் உயிர் அதன் ஆழத்​தில்​தான் உள்​ளது. முன்​னணி​யில் (ஃபோர்​கிர​வுண்ட்) இருக்​கும் தோள்​பட்டை மங்​கலாக​வும் (அவுட் ஆஃப் ஃபோகஸ்), பின்​னணி​யில் (பேக்​கிர​வுண்ட்) இருக்​கும் முகம் தெளி​வாக​வும் (இன் ஃபோகஸ்) இருக்​கும்​போது, அது திரை​யில் முப்​பரி​மாணத் தன்​மையை உரு​வாக்கு கிறது. இதனால், “நான் ஒரு படம் பார்க்​கிறேன்” என்ற நிலை​யி​லிருந்து “நான் அந்த அறைக்​குள் இருக்​கிறேன்” என்ற உணர்​வுக்​குப் பார்​வை​யாளரை நகர்த்​துகிறது.

தனிமையி​லிருந்து கூட்டு உணர்​வுக்கு

முழு​மை​யான பாயின்ட் ஆஃப் வியூ (POV) ஷாட் நம்மை கதா​பாத்​திரத்​தின் கண்​களாக மாற்​றுகிறது. ஆனால், ஒடிஎஸ்​-ல் தெரி​யும் அந்​தச் சிறு தோள்​பட்​டைப் பகு​தி, “நான் பார்க்கிறேன்” என்​பதைத் தாண்​டி, “நாம் இணைந்து உரை​யாடு​கிறோம்” என்ற பிணைப்பை உருவாக்கு​கிறது. இந்​தச் சிறிய காட்​சிச்சான்​றுதான் பார்​வை​யாள​ருக்​கும் திரைக்​கும் இடையே நெருக்​க​மான உறவை ஏற்​படுத்​துகிறது.

          

பதற்​றத்​தின் கருவி

த்ரில்​லர் திரைப்​படங்​களில் ஒடிஎஸ் மர்​ம​மான கரு​வி​யாகச் செயல்​படு​கிறது. தோளுக்​குச் சொந்​த​மானவர் யாரென்று தெரி​யாத​போதும், அல்​லது அவர் திடீரெனத் திரும்​பு​வாரோ என்ற அச்​சம் நில​வும்​போதும், இந்த ஷாட் பார்​வை​யாளரிடம் படபடப்பை உண்​டாக்​கு​கிறது. இங்கு தோள் என்​பது சில நேரங்​களில் உண்​மை​யைத் தடுக்​கும் திரை​யாக​வும், சில நேரங்​களில் பயத்​தின் அடை​யாள​மாக​வும் மாறுகிறது.

டைட் ஒடிஎஸ்

தோள், சட்​டகத்​தின் பெரும்​பகு​தியை மறைக்​கும். இது முகத்​தின் நுண்​ணிய தசை அசைவு​களை​யும், கண்​களில் மின்​னும் உணர்​வு​களை​யும் மிக நெருக்​க​மாகக் காட்டும்.

இன்க்​ளோரியஸ் பாஸ்​டர்ட்ஸ் (2009)

இத்​திரைப்​படத்​தின் தொடக்​கக் காட்​சி​யில் நாஜி அதி​காரி லண்டா மற்​றும் விவ​சா​யிக்கு இடையி​லான உரை​யாடல் இயக்​குநர் க்வின்​டின் டொரான்​டினோ எடுத்த பாடம். இங்கு ‘டைட் ஒடிஎஸ்’ பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும். லண்​டா​வின் தோள் ஒரு பெரும் நிழல் போல விவ​சா​யியை அழுத்​தும். இது வேட்​டை​யாடு​பவனுக்​கும், இரை​யாகப் போகிறவனுக்​கும் இடையே இருக்​கும் உளவியல் ரீதி​யான அழுத்​தத்தை வார்த்​தைகள் ஏது​மின்​றிக் கடத்​தும்.

இன்க்​ளோரியஸ் பாஸ்​டர்ட்ஸ்...

வைடு ஒடிஎஸ்

கதா​பாத்​திரத்​தோடு சேர்த்​துச் சுற்​றி​யுள்ள சூழலும் பேசத் தொடங்​கும்.

பராசக்தி (1952) – அதி​காரத்​தின் முன் சாமானியன்

இத்​திரைப்​படத்​தின் புகழ்​பெற்ற நீதி​மன்​றக் காட்​சி​யில் ஒளிப்​ப​தி​வாளர் எஸ்​.​மாருதி ராவ் மற்​றும் இயக்​குநர் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோர் இணைந்து ஒடிஎஸ் நுட்​பத்தை மிக வலிமை​யாகப் பயன்​படுத்தி இருப்​பார்​கள்.

நீதிப​தி​யின் தோளுக்​குப் பின்​னிருந்து குணசேகரனைக் (சி​வாஜி கணேசன்) காட்​டும் போது, அது சட்​டத்​தின் பிரம்​மாண்​டத்​தை​யும் அதன் முன் நிற்​கும் தனிமனிதனின் பரி​தாப நிலை​யை​யும் உணர்த்​தும். அதே​நேரம், சிவாஜி​யின் தோளுக்​குப் பின்​னிருந்து நீதிப​தி​யைக் காட்​டும் போது, அது அதி​காரத்​திடம் சாமானியன் கேள்வி கேட்​கும் தைரி​யத்​தைப் பிர​திபலிக்​கும்.

உலக சினிமா (ஸ்​கார்​சிஸி மற்​றும் நோலன் பாணி)

‘தி டிபார்​டட்’ படத்​தில் கதா​பாத்​திரங்​களுக்கு இடையே நில​வும் அவநம்​பிக்​கையை வெளிப்​படுத்த இயக்​குநர் மார்ட்​டின் ஸ்கார்​சிஸி, ஒடிஎஸ்-ஐ ஒரு தடை​யாகப் பயன்​படுத்​து​வார். ஓப்​பன்​ஹைமர் படத்​தில் விசா​ரணை​யின் போது நில​வும் அழுத்​த​மான அமை​தி​யைப் படம்​பிடிக்க இயக்​குநர் கிறிஸ்​டோபர் நோலன், தோளுக்கு அரு​காமை​யில் கேம​ராவை வைத்து ஒரு​வித ‘க்​ளாஸ்ட்​ரோஃ​போபிக்’ உணர்வை உரு​வாக்​கி​னார்.

மணிரத்​னத்​தின் கவித்​து​வக் காட்சி

இந்​திய சினி​மா​வில் ஒடிஎஸ்-ஐ கலை​யாக மாற்​றிய​வர் மணிரத்​னம். அவர், தோளை முழு​மை​யாகக் காட்​டா​மல், அதன் விளிம்பை மட்​டும் மென்​மை​யாக (சாஃப்ட் ஃபோகஸ்) வைத்​திருப்​பார். உரை​யாடலின் தொடக்​கத்​தில் ஒடிஎஸ்​-ல் ஆரம்​பித்​து, உணர்ச்சி மேலோங்​கும் போது மெது​வாக புஷ்-இன் செய்​து, தோளை நீக்​கி​விட்டு முகத்தை மட்​டும் காட்​டும் க்ளோசப் ஷாட்​டுக்கு நகர்​வார்.

இது, ஒரு கதா​பாத்​திரத்தின் வெளிப்​படை​யான பேச்​சிலிருந்​து, அந்​தரங்க உணர்​வுக்​குள் பார்​வை​யாளர்​களை அழைத்​துச் செல்​லும் மென்​மை​யான பயணம். ஓவர்​-​தி-ஷோல்​டர் ஷாட் என்​பது ஒரு கோணம்.

அதோடு, அது இரு மனிதர்​களுக்கு இடையே கட்​டப்​படும் உணர்ச்​சிப் பாலம். வார்த்​தைகளால் விவரிக்க முடி​யாததை, ஒரு தோளின் விளிம்​பும் அதற்​குப் பின்​னால் தெரி​யும் முகத்​தின் உணர்​வும் சொல்​லி​விடும். உண்​மை​யில், சினிமா மொழி​யின் ஆணிவேர் இந்த ஒடிஎஸ் ஷாட்​களில்​தான் ஒளிந்​திருக்​கிறது.

மகாநதி (1994) – உணர்ச்​சிகளின் உச்​சம்

சிறை​யில் தனது மகளைப் பல வருடங்​களுக்​குப் பிறகு கமல்​ஹாசன் சந்​திக்​கும் காட்​சி. மகளின் தோளுக்​குப் பின்​னிருந்து கமலை​யும், கமலின் தோளுக்​குப் பின்​னிருந்து மகளை​யும் காட்​டும் போது, அந்​தத் தோள்​கள் அவர்​கள் இரு​வருக்​கும் இடையே இத்​தனை காலம் இருந்த “கால இடைவெளியை” உணர்த்​தும்.

விக்​ரம் வேதா (2017) – கண்​ணா​மூச்சி ஆட்​டம்

மாதவனும் விஜய் சேதுப​தி​யும் நேருக்கு நேர் அமர்ந்து பேசும் “புலி-ஆடு” கதைக் காட்​சிகள். இதில் கேமரா அடிக்​கடி ஒரு​வரின் தோளுக்​குப் பின்​னால் இருந்து அடுத்​தவர் முகத்​துக்​குத் தாவும்.

இது நாம் ஒரு “டென்​னிஸ் மேட்ச்” பார்ப்​பது போன்ற விறு​விறுப்​பைத் தரும். ஒரு​வரின் தோள் மற்​ற வரைப் பாதி மறைப்​பது, இரு​வருமே ஏதோ ஒரு ரகசி​யத்தை ஒளித்து வைத்​திருக்​கிறார்​கள் என்ற பிம்​பத்தை உரு​வாக்​கும்​.ஒரு சுவாரஸ்​ய​மான நுட்​பம்.

டர்ட்டி ஓடிஎஸ் / க்ளீன் ஓடிஎஸ்

டர்ட்டி ஓடிஎஸ் - முன்​னால் இருப்​பவரின் தோள் அல்​லது தலை​யின் ஒரு பகுதி திரை​யில் தெளி​வாகத் தெரிந்​தால் அது ‘டர்ட்டி ஷாட்’. இது இரு​வருக்​கும் இடையே இருக்​கும் நெருக்​கத்​தைக் காட்​டும்.

வட சென்னை / அசுரன்

இயக்​குநர் வெற்​றி​மாறன் – ஒளிப்​ப​தி​வாளர் ஆர்.வேல்​ராஜ் கூட்​ட​ணி​யில் ஒடிஎஸ் என்​பது யதார்த்​தத்​தின் அடை​யாளம். வட சென்னை சிறைச்​சாலைக் காட்​சிகளில், ஒரு​வரின் தோள் சட்​டகத்​தின் பெரும்​பகு​தியை மறைக்​கும் ‘டர்ட்டி ஒடிஎஸ்’ முறையை வேல்​ராஜ் கையாண்​டிருப்​பார். இது பார்​வை​யாளர்​களுக்கு ஒரு ரகசி​யத்​தை ஒட்​டுக்​கேட்​கும் உணர்​வைத் தரும்.

அசுரன் படத்​தில் அதி​காரி​யின் தோளுக்​குப் பின்​னிருந்து சிவசாமியைப் பார்க்​கும் கோணம், அவர் ஒடுக்கப்​பட்​டிருப்பதை காட்சி ரீதி​யாகவே உறு​திப்​படுத்​தும் இந்த ஷாட்​டு​கள் கதை சொல்​லும் கரு​வி​யாகி, பார்​வை​யாளர்​களைக் காட்​சி​யின் ஆழத்​துக்கு அழைத்​துச் செல்​கின்​றன.

க்ளீன் ஓடிஎஸ்

தோள் மிகக் குறை​வாக அல்​லது விளிம்​பில் மட்​டும் தெரிந்​தால் அது ‘க்​ளீன் ஷாட்’. இது அந்​தக் கதா​பாத்​திரம் தனிமை​யில் இருப்​ப​தைப் போன்ற அல்​லது அவர் மீது மட்​டும் முழு கவனம் செலுத்​து​வதைப் போன்ற உணர்​வைத் தரும். ஒடிஎஸ் என்​பது மேடை நாடகங்​களில் சாத்​தி​யமில்​லாத, சினி​மாவுக்கே உரித்​தான நுணுக்​கம். மேடை​யில் பார்​வை​யாளர்​கள் நிலை​யான தூரத்​தில் இருந்து காட்​சியைக்காண்​கிறார்​கள்.

ஆனால், சினி​மா​வில் ஒரு கதா​பாத்​திரத்​தின் தோள்​பட்​டைக்குப் பின்​னால் கேம​ராவை வைப்​ப​தன் மூலம், அது திரை​யில் வலுவான ஆழத்தை உரு​வாக்​கி, பார்​வை​யாளர்​களைக் கதை நிகழும் இடத்​துக்​குள்​ளேயே கொண்டு செல்​கிறது.

- cjrdop@gmail.com

(புதன்​தோறும் ஒளி​காட்​டுவோம்​)

SCROLL FOR NEXT