தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்துக்காக வட சென்னை செட்

நிலா

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘அரசன்’. இதில் அவர் 3 வித வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.

வெற்றி மாறனின் ‘வட சென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்குச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பிரம்மாண்டமாக வட சென்னை செட் அமைத்துள்ளனர்.

மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள அந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT