தமிழ் சினிமா

வில்​லன்​களே இல்​லாத ‘ஹாய்’

நிலா

நயன்​தா​ரா, கவின் முதன்மை பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘ஹாய்’.

பாக்​ய​ராஜ், பிரபு, ராதிகா சரத்​கு​மார், விடிவி கணேஷ், சத்​யன், ‘ஆதித்​யா’கதிர், குரேஷி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளார்​கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப்​படத்​துக்கு ஜென் மார்ட்​டின் இசையமைத்​துள்​ளார். விஷ்ணு எடவன் இயக்கி இருக்​கிறார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்​சர்​ஸ்​, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் நயன்​தா​ரா, விக்​னேஷ் சிவன், எஸ்​.எஸ்​.லலித்​கு​மார் இணைந்து தயாரித்​துள்​ளனர். வினோத் சி.ஜே. மற்​றும் கே.எஸ்.மயில்​வாகனன் இணை தயாரிப்பு செய்​துள்​ளனர்.

இப்​படத்​தின் பாடல் ஏற்கெனவே வெளி​யாகி வரவேற்​பைப் பெற்றுள்ள நிலையில், வெளி​யீட்​டுத் தேதி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி ஆக.14-ல் இந்​தப் படம் வெளி​யாகிறது.

விஷ்ணு எடவன் கூறும்​போது, “இந்​தப் படம் எளிமை​யான, இனிமை​யான திரைப்​படம். ரசிகர்​கள் தங்​களு​டைய குடும்​பத்துடன் ஜாலி​யாக பார்க்​கும் வகை​யில் பொழுது​போக்கு அம்சங்களு​டன் தயா​ராகி இருக்​கிறது.

சென்​னை, கோவை, பொள்​ளாச்சி ஆகிய இடங்​களில் படத்​தின் கதை நடக்​கிறது. ’டார்லிங் டார்​லிங் டார்​லிங்’, ‘சந்​தோஷ் சுப்​பிரமணி​யம்’, ‘யாரடி நீ மோகினி’ படங்​களைப் போல் வில்​லன்​களே இல்​லாத படமாக இது உரு​வாகி இருக்​கிறது” என்​றார்.

SCROLL FOR NEXT