தமிழ் சினிமா

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’

நிலா

முகேன் ராவ் நாயக​னாக நடித்​துள்ள படம், ‘மைலோ’. கவின் மூர்த்தி எழுதி இயக்​கி​யுள்ள இதில், தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்​காந்த், இந்​திரஜா, சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். எஸ்எஸ்ஆர் என்​டர்​டெயின்​மென்ட் சார்​பில் கே.ஐ.சுரேஷ் தயாரித்​துள்​ளார். ஜென் மார்ட்​டின் இசையில், ஜிஜு சன்னி ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​தின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“18 ஆண்​டுகளுக்கு முன்பு நடை​பெற்ற ஒரு குற்​றத்​தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மைய​மாகக் கொண்டு இதன் கதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. பல ஆண்​டுகளுக்கு முன்பு நடந்த குற்​றத்​தின் பின்​னணி​யில் மறைந்​திருக்​கும் உண்​மையை, செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்​வாறு கண்​டு​பி​டிக்​கிறார் என்​ப​து​தான் படம்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT