தமிழ் சினிமா

கண்​டேன் கலை​ஞானியை! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 24

Guest Author

எனக்கு 14, 15 வயது இருக்​கும் போது சென்னை அரு​கிலுள்ள கோவளத்​துக்​குச் சென்​றோம். அங்கு ‘அன்னை வேளாங்​கண்​ணி’ என்ற படத்​தின் படப்​பிடிப்​பு. அதில் ஒரு பாடலுக்கு நடன​மாட இளம்​பெண் தேவை என்று நடன இயக்​குநர் தங்​கப்​பன் மாஸ்​டர் கேட்​டிருந்​தார்.

அதில் ஆடு​வதற்கு என் அக்கா ஹேம​மாலினி தேர்​வாகி இருந்​தார். அதன் படப்​பிடிப்​புக்கு நாங்​களும் சென்​றோம். நான், என் தம்பி இன்​னும் சிலரும் அங்​குள்ள பீச்​சில் விளை​யாடிக் கொண்​டிருக்​கும் போது, பளிச்​சென்று மின்​னல் மாதிரி ஓர் உரு​வம் கடந்து சென்​றது.

அந்த இருட்​டிலும் பளீர் என்று தெரியக் கூடிய அளவில் அவருடைய கலர் இருந்​தது. அவர் யாரென்று தெரி​யாது. அவர் கமல் அண்ணா என்​பதும் தங்​கப்​பன் மாஸ்​டரிடம் உதவி நடன இயக்​குந​ராக பணி​யாற்​றுகிறார் என்​பதும் பிறகு​தான் தெரிந்​தது.

          

படப்​பிடிப்பு முடிந்து வந்​து​விட்​டோம். பிறகு என் சகோ​தரி டப்​பிங் கலைஞர் ஆகி​விட்​டார். அப்​போது கமல் அண்​ணா​வின் ‘விக்​ரம்’ படத்​தின் ‘வனி​தாமணி...’ பாடலுக்கு முன் வரும் ‘கண்ணே தொட்​டுக்​க​வா, கட்​டிக்​க​வா’ என்ற வசனத்​துக்​குக் குரல் கொடுத்​தது கமல் அண்​ணா​வும் என் அக்கா​வும். அங்கு நானும் சென்​றிருந்​தேன். அப்​போது அவர் பெரிய நடிக​ராகி​விட்​டார் என்ப தால் நாங்​கள் பார்ப்​போம், பேசிக்​கொள்​ள​மாட்​டோம்.

நான் டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தால் என்னை அவரிடம் அறி​முகப்​படுத்​திக் கொள்​ள​வில்​லை. பிறகு ஒரு நாள், நாங்​கள் டப்​பிங் படங்​களுக்​குப் பேசிக் கொண்​டிருந்​த​போது, அவர் ஏதோ ஒரு படத்​துக்கு டப்​பிங் பேசுவதற்​காக வந்​தார். என்னை பார்த்​துட்​டு, “என்ன நீ டப்​பிங்​லாம் பேசறி​யா?” என்று கேட்​டார்.’ ஆமாண்​ணா’ என்​றேன்.

பிறகு சென்​று​விட்​டார். அதற்​குப் பிறகு நாச்​சி​யப்​பன் என்ற ஒரு புரொடக்​ச‌ன் மானேஜர் அழைத்​தார். ‘தேவர் மகன்’ படத்​தில் ராமு மச்​சானுக்​குப் பேச வேண்​டும் என்​றார். “மதுரை ஸ்லாங்ல பேசணும்” என்​றார். அப்​போது என் பங்​காளி வீரமணி​தான் டப்​பிங் பொறுப்​பாளர். நான் சபரிமலைக்கு மாலை போட்​டிருந்​த​தால் பெரிய மீசை வைத்​திருந்​தேன். ஆளும் முரட்​டுத்​தன​மாக இருந்​தேன். நான் போய் டப்​பிங் பேசி​விட்டு வந்​தேன்.

கமல் அண்ணா பாராட்​டி​னார். இதையடுத்து ‘மகாந​தி’ படத்​தில் வாட்ச்​மேன் கதா​பாத்​திரத்​துக்கு பேசினேன். அதை​யும் பாராட்​டி​னார். இப்​படி அவரிடம் பாராட்டு வாங்​கிக் கொண்​டிருக்​கும் போது, நான் கொஞ்​சம் கொஞ்​ச​மாக நடிக்க ஆரம்​பித்​தேன். ‘சின்ன பாப்பா பெரிய பாப்​பா’ தொடரில் நடித்​துக் கொண்​டிருந்த போது ஒரு எபிசோடில் மருந்து குடித்​ததும் என் உடல் தங்​க​மாகி​விடு​வது போல காட்​சி. அதற்​காக உடல் முழு​வதும் கோல்டு பெயின்ட் அடித்​தார்​கள்.

அப்​படி நடித்​த​தால் எனக்கு மூன்று நாட்​கள் வியர்க்​கவே இல்​லை. வியர்வை துவாரங்​கள் பெயின்​டால் அடைபட்​டு​விட்​டது. ஸ்டீம் பாத் எடுக்க நேரமில்​லாத காரணத்​தால் ஏதோ ஒரு எஸ்​டிடி பூத்​துக்​குள் சென்று அந்த வெக்​கைக்​குள் அதிக நேரம் நின்று வியர்​வையை வரவைத்து சரி செய்​தேன். இப்​படித் தங்க பெயின்ட் அடித்து நடித்த எபிசோடை எதேச்​சை​யாக, கமல் அண்ணா பார்த்​திருக்கி றார். என்னை அவர் ஆபீஸுக்கு வரச் சொன்​னார்​கள்.

ஆழ்​வார்​பேட்டை அலு​வல​கத்​துக்கு சென்​றேன். அவர் வந்​ததும் வணக்​கம் வைத்​தேன். அவர் என்​னைப் பார்த்​து​விட்டு ஒன்​றும் பேசாமல் போய்​விட்​டார். பிறகு அவர் அறைக்கு அழைத்​தார்​கள். போனேன். உள்ளே நுழைந்த தும் மறு​படி​யும் வணக்​கம் வைத்​தேன். திரும்​பிப் பார்த்​தவர், “தி​மி​ரா?” என்று கேட்​டார். எனக்கு ஒன்​றும் புரிய​வில்​லை. கை,​கால்​கள் நடுங்க ஆரம்​பித்​து​விட்​டன. “நாம ஒரு தப்​பும் பண்​ணலை​யே?” என்று நினைத்​தேன்.

“உடம்பு முரட்​டுத்​தனமா இருக்​கிற திமி​ரா?” என்று மீண்​டும் கேட்​டார். நான், “என்ன அண்​ணா, நான் என்ன பண்​ணினேன்?” என்​றேன். “என்ன பண்​ணுனி​யா? அந்த எபிசோடை பார்த்​தேன். உடம்​பெல்​லாம் பெயின்​டு. கைய தூக்​கும் போது ஒட்​டு​து. இப்​படியா ரிஸ்க் எடுக்​கறது? இது எவ்​வளவு பெரிய டேஞ்​சர் தெரி​யு​மா, ஒனக்​கு?” என்று கோப​மாகச் சொன்​னார்.

“ஆமா. மூணு நாளா வியர்க்​கவே இல்​லை” என்று சொன்​னேன். “எப்​படி வியர்க்​கும்?” என்​றவர், நடிகர் ஒரு​வரின் பெயரைச் சொல்​லி, அவருக்கு இப்​படி பெயின்ட் அடிச்​சு​விட்​டாங்க, அவர் இறந்தே போயிட்​டார் தெரி​யு​மா, உனக்​கு. இனிமே இந்த வேலை​யெல்​லாம் செய்​யாத” என்​றார். “சரிங்​கண்​ணா” என்​றேன். “காபி சாப்​டுட்டு போ” என்​றார். சரி என்று வந்​தேன்.

வெளி​யில் வந்​ததும் அவர் கோபப்​பட்​டது எனக்​குத் தெரிய​வில்​லை. அவர் நான் நடித்த அந்த எபிசோடை பார்த்​தது, என் மீது அவ்​வளவு அக்​கறை கொண்​டு, அழைத்து கண்​டித்த அந்த அன்பு எனக்கு பெரி​தாகத் தெரிந்​தது. அதற்​குப் பிறகு அவர் மீதான பாசம் பல மடங்கு அதி​க​மாகி விட்​டது. பிறகு ‘தசாவ​தா​ரம்’ படத்​தில் அவருடன் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. டி.ஆர்​.​கார்​டனில் படப்​பிடிப்​பு.

பொன். குமரன் என்ற அசோசி​யேட்​டிடம் நான் பேசிக்​கொண்​டிருந்​த​போது, “சார் வர்​றார்” என்​றார் அவர். திரும்​பிப்​பார்த்​தால் அச்சு அசலாக வெள்​ளைக்​காரர் போல வந்​தார் ஒரு​வர். அந்த பிளட்​சர் கேரக்​டர். எனக்கு ஆச்​சரிய​மாக இருந்​தது, எப்​படி இப்​படி அச்சு அசலாக வெள்​ளை​ககர​ராகவே மாறி​னார் என்​று.

அவருக்கு வழக்​கம்​போல வணக்​கம் வைத்​து​விட்டு நின்​றேன். “எப்ப வந்​த?” என்று கேட்​டு​விட்​டுச் சென்​று​விட்​டார். படத்​தில் அவருக்கு ஜீப் ஓட்​டும் கதா​பாத்​திரம் எனக்​கு.​நான் ஜீப் ஓட்​டு​கிறேன். என் அரு​கில் கமல் அண்ணா வெள்​ளைக்​காரர் தோற்​றத்​தில் இருக்​கிறார்.

பின்​னால் இயக்​குநர் கே.எஸ்​.ரவி​கு​மார் இருந்​தார். முன்​னால் செல்​லும் வண்​டி​யில் கேமரா இருக்கி றது. இப்​போது வண்​டியை போரூர் சாலை​யில் ஓட்​டிக்​கொண்டு சென்​றேன். “இன்​னைக்கு உனக்​கு​தான் ஃபேன்​ஸ்” என்​றார் கமல் அண்​ணா. “சும்​மாருங்​க... நீங்க இருக்​கும் போது எப்​படி?” என்று சொல்​லி​விட்டு ஜீப் ஓட்​டிக் கொண்​டிருந்​தேன்.

“நீ பாரு” என்று சொல்​லி​விட்டு ஜீப்​பில் அமர்ந்து கொண்​டார். போரூர் ரவுண்​டானா வரை சென்று யு-டர்ன் பண்ணி போகும்​போது, ஒரு இடத்​தில் நிறுத்தி னோம். அப்​போது சைக்​கிளில் வந்த ஒரு​வர் என்​னைப் பார்த்​து​விட்​டு, “இதோடா பட்​டாபி” என்று சொல்​லி​விட்​டுப் போனார். இன்​னும் சிலரும் அப்​படியே சொல்​லி​விட்​டுப் போனார்​கள். மேக்​கப்​பில் இருந்த கமல் அண்​ணாவை யாருக்​கும் அடை​யாளம் தெரிய​வில்​லை.

“நான் சொன்​னேன்ல” என்​றார் அவர். அந்​தளவுக்​குத் தனது ஒப்​பனை மீது அவருக்கு நம்​பிக்கை இருந்​தது. சரி​யாக நடித்​து​விட்​டால் அப்​படி பாராட்​டு​வார். நாடக நடிகர்​களை எல்​லாம் அழைத்து நடிக்க வைப்​பார். அதற்கு உதா​ரணம், கள்​ள​பார்ட் நடராஜன் அண்​ணன். ‘தேவர் மகன்’ படத்​தில் அவரை நடிக்க வைத்​தார். அவரை போல பலரை நடிக்க வைத்​திருக்​கிறார்.

சமீபத்​தில் ‘தேவர் மகன்’ படத்தை ரீ ரிலீஸ் செய்​வதற்​காக மெரு​கேற்​றும் போது கள்​ள​பார்ட் நடராஜன் கேரக்​டருக்கு என்​னைப் பேச வைத்​தார்​கள். “ஏற்​கெனவே ராமு மச்​சானுக்கு பாஸ்​கர் பேசி​யிருக்​காரே” என்று யாரோ கமல் அண்​ணா​விடம் சொன்​னதும், “பர​வா​யில்​லை, அது யங்​ பாஸ்​கர்​ பேசினது, இது வேற பாஸ்​கர்​” என்​று வேடிக்​கை​யாகச்​ சொன்​னார்​. ஆம்​.அது 1991ம்​ ஆண்​டு.

(திங்கள்தோறும் பேசுவோம்)

SCROLL FOR NEXT