தமிழ் சினிமா

2026-ல் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்

செய்திப்பிரிவு

கடந்த 2025-ம் ஆண்​டில் 285 திரைப்​படங்​கள் வெளி​யாகி சாதனை படைத்​தது கோலிவுட். இதில் 35 படங்​கள் மட்​டுமே வணிக ரீதி​யாக வெற்​றி​பெற்​றன.

பெரும்​பாலான திரைப்​படங்கள் சிறு​பட்​ஜெட்​டில் உரு​வானவை. ரஜினி​யின் ‘கூலி’ ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்​தது. ‘குட் பேட் அக்​லி’, ‘டி​ராகன்’, ‘வி​டா​முயற்​சி’, ‘ட்​யூட்’ ஆகிய திரைப்​படங்​கள் மட்​டுமே 100 கோடிக்கு மேல் வசூலித்​தன.

இந்​நிலை​யில் 2026-ம் ஆண்​டில் ரசிகர்​களின் எதிர்​பார்ப்​புக்​குள்​ளாகி இருக்​கும் திரைப்​படங்​கள் வரிசைக் கட்டி நிற்​கின்​றன. வருடத்​தின் முதல் மாதத்​திலேயே விஜய்​யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய பிரம்​மாண்​டத் திரைப்​படங்​கள் வெளி​யாகின்​றன.

ஜனநாயகன்: தமிழக வெற்​றிக்​கழகத்தை நடிகர் விஜய் தொடங்கி இருப்​ப​தால் அவருடைய கடைசி படமாகி இருக்​கிறது ‘ஜன​நாயகன்’. இதனாலேயே இப்​படத்​துக்கு அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது. ஹெச்​.​வினோத் இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு உள்பட பலர் நடித்​துள்​ளனர். பொங்​கலை முன்​னிட்டு ஜன.9-ம் தேதி வெளி​யாகிறது இப்​படம்.

பராசக்தி: சுதா கொங்​கரா இயக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் ஹீரோ​வாக நடித்​துள்ள படம் இது. ரவி மோகன் வில்​ல​னாக நடித்​துள்ள இதில், அதர்​வா, ஸ்ரீலீலா என பலர் நடித்​துள்​ளனர். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். 1960-களில் தமிழகத்​தில் நடந்த இந்தி எதிர்ப்​புப் போராட்​டத்தை மைய​மாக வைத்து இப்​படத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர். பொங்​கலை முன்னிட்டு ஜன.10-ம் தேதி இப்படம் வெளி​யாகிறது.

ஜெயிலர் 2: நெல்​சன் திலீப் குமார் இயக்​கத்​தில் ரஜினி​காந்த் நடித்து வெற்றி பெற்ற ‘ஜெ​யிலர்’ படத்​தின் அடுத்த பாகம் இது. எஸ்​.ஜே. சூர்​யா, ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்​கரவர்த்தி உள்படபலர் நடிக்​கின்​றனர். அனிருத் இசைஅமைக்​கும் இப்​படம் ஜுன் மாதம் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜெயிலர் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்​தது என்ப​தால் இந்​தப் படம் தமிழ் சினி​மா​வின் ஆயிரம் கோடி வசூல் கனவை நிறைவேற்ற வாய்ப்​பிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

கருப்பு: ஆர்ஜே பாலாஜி இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள திரைப்​படம், ‘கருப்​பு’. த்ரிஷா, மலை​யாள நடிகர் இந்​திரன்​ஸ், நட்​டி, ஷிவ​தா, சுவாசிகாஎன பலர் நடித்​துள்ளனர். 2025-ல் வெளி​யாக இருந்த நிலை​யில் சில காரணங்​களால் இந்த வருடம் வெளியாகிறது. வெங்கி அட்​லூரி இயக்​கத்​தில் சூர்​யா, மமிதா பைஜு நடித்​துள்ள 46-வது படமும் இந்தாண்​டில் வெளி​யாக இருக்கிறது.

தனுஷ் 54: ‘போர்​தொழில்’ விக்​னேஷ் ராஜா இயக்​கத்​தில் தனுஷ் நடித்​துள்ள படத்​துக்கு இன்​னும் பெயர் வைக்​க​வில்​லை. இதில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்​சரமூடு, கருணாஸ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ஜி.​வி.பிர​காஷ்கு​மார் இசை அமைக்​கும் இப்​படம் பிப்​ர​வரி மாதம் வெளி​யாகலாம் என்று கூறப்​படு​கிறது.

வா வாத்​தி​யார், சர்​தார் 2: நலன் குமர​சாமி இயக்​கத்​தில் கார்த்தி நடித்​துள்ள படம் வா வாத்​தி​யார். கார்த்​தி​யுடன், கீர்த்தி ஷெட்​டி, ராஜ்கிரண், சத்​ய​ராஜ், கருணாகரன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். இப்​படம் டிசம்​பரில் வெளி​யாக இருந்​தது. பைனான்ஸ் பிரச்​சினை காரண​மாக வெளி​யா​காத​தால், இந்த வருடம் வெளி​யாக இருக்கிறது. மித்​ரன் இயக்​கத்​தில், கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளி​யான படத்​தின் அடுத்த பாகம் ‘சர்தார் 2’. இப்​பட​மும் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்​கத்​தில் அவர் தற்​போது நடித்து வரும் ‘மார்​ஷல்’ படமும் இந்த ஆண்டு வெளி​யாக இருக்​கிறது.

அரசன்: வெற்​றி​மாறன் இயக்​கத்​தில் சிம்பு நடிக்​கும் படம். வட சென்னை கதையைக் கொண்ட இப்​படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். கலைப்​புலி எஸ் தாணு தயாரிக்​கும் இப்​படத்​தில் விஜய் சேதுபதி முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். வெற்​றி​மாறன் - சிம்பு - விஜய் சேதுபதி கூட்​டணி என்​ப​தால் இப்​படத்​துக்கு எதிர்​பார்ப்பு உள்​ளது.

ஜீனி, கராத்தே பாபு, ப்ரோ கோட்: ‘பராசக்​தி’​யில் வில்​ல​னாக நடித்​துள்ள ரவி மோகன், ஹீரோ​வாக நடித்​துள்ள 3 படங்​கள் இந்த வருடம் வெளி​யாக வாய்ப்​பிருக்​கிறது. அறி​முக இயக்​குநர் அர்​ஜுனன் இயக்​கத்​தில் அவர் நடித்​துள்ள ‘ஜீனி’​ படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது. இதில் கல்​யாணி பிரியதர்​ஷன், வாமிகா, கிருத்தி ஷெட்டி என பலர் நடித்​துள்​ளனர். கிராபிக்​ஸுக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட படம் என்​ப​தால் அதன் வேலைகள் சென்​று​கொண்​டிருக்​கின்​றன.

அடுத்து அவர் சட்​டமன்ற உறுப்​பின​ராக நடித்​துள்ள ‘கராத்தே பாபு’ படத்​தின் டீஸர் வரவேற்​பைப் பெற்​றுள்ள நிலை​யில் இப்​படத்​துக்கு எதிர்​பார்ப்பு இருக்​கிறது. இதை ‘டா​டா’ இயக்​குநர் கணேஷ் கே.​பாபு இயக்கி இருக்​கிறார். கார்த்​திக் யோகி இயக்​கத்​தில் அவர் நடித்​துள்ள ‘ப்ரோ கோட்’ படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்​பில் அவரே தயாரிக்​கிறார். இதில் அர்​ஜுன் அசோகன், யோகி பாபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீகவுரி பிரியா நடித்து வரு​கின்​றனர்.

மகுடம்: விஷால் நடிக்​கும் ‘மகுடம்’ இந்த வருடம் வெளி​யாக இருக்​கிறது. படத்தை இயக்கி வந்த ரவி அரசுக்​கும் விஷாலுக்​கும் பிரச்​சினை ஏற்​பட்​ட​தால், இப்​படத்தை விஷாலே இயக்​கி​ உள்​ளார். சூப்​பர் குட் பிலிம்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​தில் துஷாரா விஜயன், அஞ்​சலி உள்பட பலர் நடிக்​கின்​றனர். விஷாலின் முதல் இயக்​கம் என்​ப​தால் எதிர்​பார்ப்பு இருக்​கிறது.

டிரைன்: விஜய் சேதுபதி நடித்​துள்ள இப்​படத்தை மிஷ்கின் இயக்கி இருக்​கிறார். ‘சைக்​கோ’ படத்​துக்​குப் பிறகு மிஷ்கின் இயக்​கத்​தில் வெளி​யாகும் படம் என்​ப​தால் எதிர்​பார்ப்புள்ளது.

காஞ்​சனா 4: ராகவா லாரன்ஸ் இயக்​கத்​தில் உரு​வாகும் ‘காஞ்​சனா 4’ இந்​த ஆண்டு வெளி​யாக இருக்​கிறது. இதில் பூஜா ஹெக்​டே, நோரா பதேகி உள்பட பலர் நடிக்​கின்​றனர். இதில் பேயை அவர் எப்​படிக் காட்​டப் போகிறார் என்​கிற ஆர்​வத்​தில் ரசிகர்​கள் இப்​படத்தை எதிர்​நோக்​கி​யுள்​ளனர்.

லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி: பிரதீப் ரங்​க​நாதன் நடித்து 2025-ல் வெளி​யான ‘டிராகன்’, ‘ட்யூட்’ ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்​துள்​ள​தால் இந்​தப் படத்​துக்கு எதிர்​பார்ப்பு உள்​ளது. விக்​னேஷ் சிவன் இயக்​கி​யுள்ள இதில், சீமான், கிருத்தி ஷெட்​டி, எஸ்​.ஜே.சூர்​யா, யோகி​பாபு, மிஷ்கின் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

மூக்​குத்தி அம்​மன் 2: ஆர்ஜே பாலாஜி இயக்​கத்​தில் நயன்தாரா நடித்த மூக்​குத்தி அம்​மன் ஹிட்​டான​தால், அதன் 2-ம் பாகம் இப்​போது உரு​வாகி​யுள்​ளது.

சுந்​தர் சி இயக்​கி​யுள்ள இதில் நயன்​தாரா மூக்​குத்தி அம்​ம​னாக நடித்​துள்​ளார். ஊர்​வசி, ரெஜினா என பலர் நடித்​துள்ள இப்​படம், இந்த வருடம் வெளி​யாக இருக்​கிறது.

இந்​தப் படங்​கள் எதிர்​பார்ப்​புக்​குள்​ள​தாக இருந்​தா​லும் கடந்த வருடம் வெளி​யான 285 படங்​களில் அதி​கம் வெற்​றி​பெற்ற திரைப்​படங்​கள் சிறு​பட்​ஜெட்​ படங்​கள்​தான்​. அதனால்​ எதிர்​பார்க்​காமல்​ வந்​து வெற்​றி​பெறும்​ படங்​களும்​ இந்த​ஆண்டு அ​திகம்​ வர வாய்ப்பு இருப்பதாக திரைத் துறையினர் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT