நடிகர் மைம் கோபி
குணச்சித்திர நடிகர் மைம் கோபி, கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை யுவர்பேக்கர்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை சந்தோஷ் இயக்குகிறார்.
“திகில் மற்றும் பரபரப்பு நிறைந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மட்டுமல்லாமல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தும் சமூகக் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது.
தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களின் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.