தமிழ் சினிமா

“அப்பாவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் மகள்” - ‘மெல்லிசை’ இயக்குநர் திரவ் நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

விமர்சன ரீதி​யாக வரவேற்​பைப் பெற்ற ‘வெப்​பம் குளிர் மழை’ படத்தை தயாரித்து இயக்​கிய திரவ், அடுத்து இயக்கி இருக்​கும் படம், ‘மெல்லிசை’. கிஷோர், ஜார்ஜ் மரி​யான், ஹரிஷ் உத்​தமன், சுபத்ரா ராபர்ட் உள்​ளிட்​டோர் நடித்​துள்ள இந்​தப் படம் அப்​பா - மகள் உறவை பேசுகிறது. டிசம்​பர் மாதம் வெளி​யாக இருக்​கும் இப்​படம் பற்றி இயக்​குநர் திர​விடம் பேசினோம்.

அப்​பா - மகள் கதை நிறைய வந்​திருக்​கே... இதுல எப்​படி?:

நிறைய கதைகள் வந்​திருந்​தா​லும் திரைக்​கதை வேறாகத்​தானே இருக்​கும். இது​வும் அப்​படித்​தான், ஏற்​கெ னவே வந்​ததுல இருந்து மாறு​பட்​டதா இந்​தக் கதை இருக்​கும். அப்​பாவை ஹீரோ​வாக பார்க்​கிறவர் மகள். அப்பா நல்லா பாடு​வார்.

தன்​னோட பிறந்த நாளுக்கு ரியாலிட்டி ஷோவில் நீங்க பாட​ணும்னு தன்​னோட விருப்​பத்​தைச் சொல்​லுறார். மகளை ஏமாற்ற வேண்​டாம்னு அவரும் ஒரு ஷோவுல போயி பாடறார். அதுக்​குப் பிறகு அவர் வாழ்க்கை எப்​படி மா​று​து, அவர் சூழல் எப்​படி​யிருக்​கு, அப்படிங்கறது​ கதை.

நடிகர் கிஷோரை எப்​படி தேர்வு பண்​ணுனீங்க?

ஒரு ஸ்கூல்ல பி.டி. மாஸ்​டரா வேலை பார்க்​கிற கதா​பாத்​திரத்​துக்கு அவர் சரியா இருப்​பார்னு தோணுச்​சு. என் கதைப்​படி ஒரு பி.டி. மாஸ்​டருக்​கான தோற்​ற​மும் அவருக்கு இருந்​தது. அவர் ‘ஹரி​தாஸ்’ படத்​துல பண்​ணின எமோஷனல் விஷ​யங்​கள் எனக்​குப் பிடிக்​கும். இந்​தக் கதை​யில வர்ற அப்​பா- மகள் விஷ​யங்​களுக்கு அவர் ரொம்ப பொருத்​தமா இருந்​தார். அவருக்​கும் கதை ரொம்ப பிடிச்​ச​தால இந்தப் படத்​துக்​குள்ள வந்​தார்.

‘அன்பு மட்​டும் அண்​டம் தேடும்​’னு டேக் லைன் வச்சிருக்கீங்களே?:

ஆமா. எல்​லோருக்​குமே நிறைய கனவு​கள் இருக்​கும். நம்ம அடை​யாளத்​துக்​கான ஒரு தேடல் இருந்​துட்டே இருக்​கும். அது எங்க நிறைவு பெறும்​னா, நம்மை ரசிச்சு யாராவது ஒருத்​தர் அங்​கீகரிக்​கும்​போது​தான் நிறைவு பெறும். ஒரு நாலு வரி கவிதை எழு​தினா கூட, அதை யாராவது ஒருத்​தர் பிரம்​மாதம்னு சொன்​னா, அடுத்த நிமிடமே, ஒரு கவிஞனா மாறிடுறீங்​கள்ல, அந்த ஒரு சின்​னப்​புள்​ளி​தான் இந்​தப் படத்​தோட ஆரம்​பமே.

இந்​தக் கதை​யில அப்​பாவுக்​கான அங்​கீ​காரத்தை அவர் மகள் கொடுக்​கிறதா திரைக்​கதை இருக்​கும். நம்ம அங்கீகாரத்​துல முக்​கிய​மான விஷயமா இருக்​கிறது அன்பு மட்டும் ​தான்​. அந்த அன்பை இந்த பிரபஞ்​சம் தேடிட்டே இருக்​கும். அது​தான் கதை.

மகள் கதா​பாத்​திரத்​துல யார் நடிச்​சிருக்​காங்க?

ஆடிஷன் வச்சு தனன்​யாங்கற சிறுமியைத் தேர்வு பண்​ணினோம். இந்​தப் படத்​துக்கு முன்​னால சின்ன சின்ன ரோல்ல சில படங்​கள்ல நடிச்​சிருக்​காங்க. இதுல வர்ற யாழினி கதா​பாத்​திரமா அவங்​களைப் பார்க்​கும்​போது ரொம்ப பொருத்​தமா இருந்​தது. ரிலீஸுக்​குப் பிறகு அவங்க நடிப்பு பேசப்​படும்.

கதைப்​படி அப்​பா, மகளா கிஷோர், தனன்யா நடிச்​சிருக்​காங்க. அம்​மா - மகன்னு இன்​னொரு ஜோடியும் இருக்​கு. அப்பா வேலை பார்க்​கிற அதேஸ்கூல்ல அம்மா கணக்கு டீச்​சரா இருப்பாங்க. அவங்​களுக்கு மகனை ரொம்ப பிடிக்​கும். அப்பா - மகளும் அம்மா -மக​னும் அப்​படியே முரணா இருப்​பாங்க. படம் பார்க்​கும்​போது பார்​வை​யாளர்​களுக்கு இந்த ஃபேமிலியை ரொம்ப பிடிக்​கும்.

இதுல அம்​மாவா நடிச்​சிருக்​கிற சுபத்​ரா​வும் கிஷோரும் ஏற்​கெனவே ‘வடசென்​னை’ல நடிச்​சிருக்​காங்​களே...

ஆமா. அதுல அவங்க ரெண்டு பேருக்​கும் நிறைய காட்​சிகள் இருந்​ததுன்னு சொல்​லி​யிருக்​காங்க. அந்​தப் படத்​துல அதை குறைச்​சிட்​டாங்க. அவங்க ஏற்​கெனவே ஜோடி​யாக நடிச்​சிருக்​கிற​தால, இதுல அவங்க தொடர்​பான காட்​சிகள் ரொம்ப யதார்த்​தமா இருந்​தது.

மகனா, ஜஸ்​வந்த் மணி​கண்​டன் நடிச்​சிருக்​கார். ஜார்ஜ் மரி​யான் சார், ஸ்கூல் பிரின்​சிபலா நடிச்​சிருக்​கார். ஹரிஷ் உத்​தமன் நெகட்​டிவ் கேரக்​டர்ல வர்​றார். சென்னை பம்​மல் பகு​தி​யில நடக்​கிற கதை.

‘மெல்​லிசை’ங்கற தலைப்பு ஏன்?

இது ரொம்ப மென்​மை​யான, மெலடி மாதிரி​யான கதை அப்​படிங்​ற​தால இந்த தலைப்பு வச்சோம்​.

SCROLL FOR NEXT