நடிகை ப்ரீத்தி அஸ்​ராணி

 
தமிழ் சினிமா

மே 8-ல் வெளி​யாகிறது ‘29’

நிலா

‘மே​யாத​மான்’ ரத்​னகு​மார் இயக்​கத்​தில் விது, ப்ரீத்தி அஸ்​ராணி, மாஸ்​டர் மகேந்​திரன், அவி​னாஷ், பிரேம் குமார் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘29’.

மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். இதை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்​ஸ், ஜீ ஸ்கு​வாட் நிறு​வனங்​கள் சார்​பில் கார்த்​தி​கேயன், இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜ் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

“2000ம் ஆண்​டில் நடக்​கும் காதல் கதை​யான இது, அந்த காலக் கட்டத்து நினை​வு​களை​யும் மனநிலை​யை​யும் அழகாகப் பிரதிபலிக்​கும் விதத்​தில் உரு​வாகி​யுள்​ளது. இப்​படம் மே 8ம் தேதி திரையரங்​கு​களில் வெளி​யாகிறது. ​படத்தை ‘தேஜாவு’, ‘வித்​தைக்​காரன்’ படங்​களைத் தயாரித்த ஒயிட் கார்​பெட் பிலிம்ஸ் சார்​பில் கே.​விஜய் பாண்டி தமிழகத்​தில்​ வெளி​யிடு​கிறார்​” என்றது படக்குழு.

SCROLL FOR NEXT