தமிழ் சினிமா

‘த்ரிகண்டா’ தலைப்பு ஏன்? - இயக்குநர் விளக்கம்

செய்திப்பிரிவு

மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ், சாஹிதி அவான்சா, கல்லூரி வினோத் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘த்ரிகண்டா’. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், ஷாஜித் இசையமைத்துள்ளனர். எஸ்விஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், நாயகன் மகேந்திரன் பேசும்போது, “இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். ‘மாஸ்டர்’ படம் எனக்குத் தெலுங்கில் நல்லஅறிமுகத்தைக் கொடுத்தது. சிறு வயதில் நடித்தபோது நான் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்தேன். அப்படி தெலுங்கில் நல்ல படம் நடிக்கலாம் என நினைத்தபோது இப்படத்தின் இயக்குநர் மணியை சந்தித்தேன்.

இந்த படம் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். ‘நாட்டாமை’ படத்தில் கே.எஸ். ரவிக்குமார் எனக்கு மாஸ்டர் மகேந்திரன் என்று பெயர் வைத்தார். எத்தனை காலத்துக்கு இப்படி மாஸ்டர் மகேந்திரன் என்கிற பெயரே தொடரும் என்று நினைத்தபோது ஒரு யுனிவர்ஸ் போல லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் ‘மாஸ்டர்’ படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் என் பெயருக்கும் அது பொருத்தமாக அமைந்துவிட்டது” என்றார்.

இயக்குநர் மணி தெலக்குட்டி பேசும்போது, “இதன் கதையை குமரிக்கண்டம் பகுதியில் நடப்பது போல உருவாக்கி இருக்கிறேன். இந்த டைட்டில் ஏன் வைத்தோம் என்பது படம் பார்க்கும்போது புரியும்” என்றார்.

SCROLL FOR NEXT