தமிழ் சினிமா

ஹாலிவுட்​டில் ரீமேக் ஆகிறது ‘மகாராஜா’

நிலா

நித்திலன் சாமிநாதன் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி, அனு​ராக் காஷ்​யப், மம்தா மோகன்​தாஸ், நட்​டி, அபி​ராமி உள்​ளிட்ட பலர் நடிப்​பில் வெளி​யான படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50-வது படமான இது, விமர்சன ரீதி​யாக​வும், வசூல் ரீதி​யாக​வும் மாபெரும் வெற்றி பெற்​றது.

சுதன் சுந்​தரம், ஜெகதீஷ் பழனி​சாமி ஆகியோர் இணைந்து தயாரித்த இப்​படத்​துக்கு அஜனீஷ் லோக்​நாத் இசையமைத்​திருந்​தார். இப்​படம் ஓடிடி-​யிலும் வரவேற்​பைப் பெற்​றிருந்​தது. சீனா​வில் டப் செய்யப்​பட்டு வெளி​யிடப்​பட்ட இந்​தப்​படம் அங்​கும் வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில், இப்​படம் ஹாலிவுட்​டில் ரீமேக் ஆக இருக்​கிறது. ஹாலிவுட்​டின் முன்​னணி நிறு​வனம் ஒன்று இப்படத்​தின் ரீமேக் உரிமை​யைப் பெற்​றுள்​ளது.

இதில் பிரபல நடிகர் மேத்யூ மெக்​கோனஹியை நடிக்க வைக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும் தயாரிப்​பாளர் சுதன் சுந்​தரம் கூறியுள்ளார். இப்​படத்​தின் ஹாலிவுட் ரீமேக் பணி​கள் அடுத்​தாண்டு தொடங்​கும் என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார். ஹாலிவுட்​டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ்ப் படம் இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதுபற்றி இயக்​குநர் நித்​திலன் சாமி​நாதன் கூறும்​போது, “இந்​தப் படம் வெளி​யாகி 2 ஆண்டு ஆகி​விட்​டது. இன்​னும் இப்​படத்​துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரு​வது மகிழ்ச்​சி​யாக இருக்கிறது. ஹாலிவுட்​டில் ரீமேக் ஆவது தமிழ் சினி​மாவுக்கு பெருமை​யாக இருக்​கும். அடுத்து ‘மகா​ராஜா 2’ படத்​துக்​கான எழுத்​துப் பணி​களில் இருக்​கிறேன்” என்​றார்.

SCROLL FOR NEXT