தமிழ் சினிமா

சா​தாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம்​தான் ‘லீடர்’ - இயக்குநர்

செய்திப்பிரிவு

துரை செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்​துள்ள படம், ‘லீடர்’. இதில் பாயல் ராஜ்புத் நாயகி​யாக நடிக்​கிறார். ஷாம், ஆண்ட்​ரி​யா, பாகுபலி பிர​பாகர், சந்​தோஷ் பிர​தாப் உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் ஏப்​ரல் மாதம் வெளி​யாகிறது. இந்​நிலை​யில் இதன் டீஸர் வெளி​யீடு சென்​னை​யில் நடைபெற்​றது. இயக்​குநர் துரை.

          

செந்​தில்​கு​மார் கூறும்​போது, “அசா​தாரண சூழ்​நிலைகளை எதிர்​கொள்​ளும் சாதாரண மனிதனின் உணர்ச்​சிப் பயணம் தான் ‘லீடர்’. தனது மகளுக்​காக என்ன வேண்டு மானாலும் செய்​யத் துணி​யும் தந்​தையைச் சுற்றி கதை சுழல்​கிறது.

இன்​றைய பார்​வை​யாளர்​களை மனதில் கொண்​டு, சிலிர்ப்​பூட்​டும் உணர்ச்​சிப்​பூர்​வ​மான படமாக இதை உருவாக்கி உள்​ளோம். ‘லீடர்’ அனை​வரை​யும் கவரும் என்று நம்​பு​கிறேன்” என்​றார். நடிகர்​கள் ஷாம், சந்​தோஷ் பிர​தாப், பாயல் ராஜ்புத் உள்பட படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

SCROLL FOR NEXT