விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘சிக்மா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக் ஷன் படமான இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மாநகரம், ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இதில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலில் ஜேசன் சஞ்சய் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.