தமிழ் சினிமா

மதுரையில் ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழா

ஸ்டார்க்கர்

ஏப்ரல் 26-ம் தேதி மதுரையில் ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. மே 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 26-ம் தேதி மதுரையில் சோலமலையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

‘கருப்பு’ இசை வெளியீட்டு விழாவுக்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் மதுரைக்கு பயணிக்க உள்ளனர். இங்கு முதன்முறையாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடல்களை பாடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று முடிந்தவுடன், சென்னையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது படக்குழு.

‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர், தயாரிப்பு வடிவமைப்பாளராக அருண் வெஞ்சரமுடு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT