தமிழ் சினிமா

‘கர’ சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதை: இயக்​குநர் தகவல்

நிலா

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ இயக்​குநர் விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்​ளார். மமிதா பைஜு, கே.எஸ்​.ரவி​கு​மார், ஜெய​ராம், கருணாஸ், சுராஜ் வெஞ்​சரமூடு, பிருத்வி பாண்​டிய​ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைத்​துள்ள இந்​தப் படத்​துக்​குத் தேனி ஈஸ்​வர் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

ஏப்​.30-ல் வெளி​யாகும் இப்​படம் பற்றி இயக்​குநர் விக்​னேஷ் ராஜா கூறிய​தாவது: இது சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதை. அடுத்து என்ன நடக்க போகிறது என்​கிற பரபரப்பு படத்​தில் இருக்​கும். ஹீரோவுக்கு அவரைச் சுற்றி நடக்​கிற சில விஷ​யங்​கள் என்ன மாதிரி​யான பாதிப்​பைக் கொடுக்​கிறது. அதற்கு அவர் என்ன செய்​கிறார் என்​பது படம்.

நான் படித்த 2 வெவ்​வேறு செய்​தி​களை இணைத்​து​தான் இப்​படத்​தைப் பண்​ணி​யிருக்​கிறேன். அதை, 1991-ல் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் நடப்​பது போல மாற்றி இருக்​கிறேன். நாயகி மமிதா பைஜு, ஹீரோவை ஒரு இடத்​திலிருந்து இன்​னொரு இடத்​துக்கு அழைத்​துச் செல்​வதற்​குக் கரு​வி​யாக இருப்​பார். அவருக்​கும் முக்​கிய​மான கதா​பாத்​திரம். 7 கதா​பாத்​திரங்​களை மையப்​படுத்​திய கதை. ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படத்​தில் எமோஷனல் காட்​சிகள் அதி​கம் இருக்​கும். வன்​முறை காட்​சிகள் இருக்​காது.

இதில் சுராஜ் வெஞ்​சமூடுக்கு முன்​பு, வேறு சில நடிகர்​களிடம் நடிக்​கக் கேட்​டோம். அவர்​கள் கதை நன்​றாக இருக்​கிறது. என் கேரக்​டர் சரி​யில்லை என்​றார்​கள். இவ்​வளவு பேர் அப்​படிச் சொல்​கிறார்​கள் என்​றால் அதில் ஏதோ பிரச்​சினை இருக்​கிறது என்று நினைத்​து அந்​த கதா​பாத்​திரத்​தை மாற்​றி எழு​தினேன்​. பிறகு​தான்​ சுராஜ் வெஞ்​சரமூடு​விடம்​ சொன்​னேன்​. உடனடி​யாக நடிக்​க ஒப்​புக்​கொண்​டார்​. இவ்​வாறு ​விக்​னேஷ் ராஜா கூறினார்.

SCROLL FOR NEXT