‘கைதி 2’ அப்டேட் குறித்து கார்த்தி கூறியுள்ள பதிலால் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ‘வா வாத்தியார்’ படத்தினை விளம்பரப்படுத்தி வந்தார் கார்த்தி. அப்போது எப்போதும் போலவே ‘கைதி 2’ குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ‘விரைவில்.. விரைவில்’ என்று முதலில் பதிலளித்தார். பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ‘கைதி 2’ குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது “’எனக்கு ஒரே ஒரு அப்டேட் பற்றி மட்டும் தெரியாது. அது ’கைதி 2” என்று பதிலளித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் லோகேஷ் கனகராஜ் மீது கார்த்தி கடும் அதிருப்தியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் மீண்டும் எல்.சி.யூ படங்கள் நடக்குமா, ‘கைதி 2’ தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இப்போதைக்கு ‘கைதி 2’ நடக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படம் குறித்து கார்த்தி கூறியுள்ள பதிலால் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.