

தமிழில் ‘ஒரு நாள் கூத்து’, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’ உள்பட சில படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவருக்கும் இவருடைய காதலர் துபாய் தொழிலதிபர் ரஜித் இப்ரானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அதை நிவேதா அறிவித்தார். டிசம்பர் இறுதியில் திருமணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிவேதா பெத்துராஜ் நீக்கியுள்ளார். ரஜித் இப்ரானும் நிவேதா பெத்துராஜுடன் இருந்த அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார்.
இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் முறிந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது.