ஜீவா ஹீரோவாக நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தை ரா.வெங்கட் இயக்கியுள்ளார். இதில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு அதே இடத்தில் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி டிச.24-ல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.