ஜீவா நடித்திருக்கும் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு அடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘கிடா’ படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்கத்தில், ஜீவா நடித்திருக்கும் படம், ‘தகப்பன்’. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு நிறைவு குறித்து ஜீவா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொரு காட்சியிலும் ஓர் உணர்வு, ஒவ்வொரு கணத்திலும் ஒரு நினைவு. ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. டிசம்பரில் படம் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
“மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படம், ‘தெனாவட்டு’ திரைப்படத்துக்குப் பிறகு, கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்குமாகும். அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும்” என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.