தமிழ் சினிமா

‘ஜெ​யிலர் 2’ படப்​பிடிப்பு நிறைவு

நிலா

நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி​காந்த் நடித்து மெகா வெற்றி பெற்ற திரைப்​படம் ‘ஜெ​யிலர்’. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்​ணா, யோகி​பாபு உள்பட பலர் நடித்​தனர். சிவ ராஜ் கு​மார், மோகன்​லால் கவுரவ வேடத்​தில் நடித்​தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்​படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்​தது.

இதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘ஜெ​யிலர் 2’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது. முதல் பாகத்​தில் நடித்​தவர்​களு​டன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்​சரமூடு உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் கார்த்​திக் கண்​ணன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு அனிருத் இசை அமைத்​துள்​ளார்.

இந்​நிலை​யில் இதன் மொத்த படப்​பிடிப்​பும் நிறைவடைந்துள்ளதாக சன் பிக்​சர்ஸ் அறி​வித்​துள்​ளது. படக்​குழுவினர் ரஜினி​காந்​துடன் கேக் வெட்டி கொண்​டாடும் புகைப்படத்​தை​யும் படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT