ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ வெளியான 8 நாட்களுக்குள் அதன் முந்தைய பாகமான ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலை முறியடித்துள்ளது.
ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் 2023-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் 2-ம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த அக்.15-ல் வெளியானது. இதில் ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியான 8 நாளில் உலகளவில் ரூ.606.05 கோடி வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், ‘ஜெயிலர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.604.74 கோடியை இப்படம் கடந்துள்ளது. இந்தியாவில் ரூ.391.55 கோடி வசூலையும், வெளிநாடுகளில் சுமார் ரூ.214.50 கோடி வசூலையும்
ஈட்டியுள்ளது இப்படம். ‘2.0’, ‘லியோ’, ஜெயிலர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரூ.600 கோடியை எட்டிய 4-வது தமிழ்ப் படம் இது.