தமிழ் சினிமா

ஹீரோ​யின் இல்​லாத படத்​தில் ஜெய்

ப்ரியா

ஜெய் ஹீரோ​வாக நடிக்​கும் படத்தை ‘எய்​தவன்’ சக்தி ராஜசேகரன் இயக்​கு​கிறார். இதை எஸ்​எஸ்டி புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்​கிறார். புல​னாய்வு க்ரைம் த்ரில்​லர் படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்​றும் திருத்​தணி​யில் நடக்க இருக்​கிறது.

இப்​படம் பற்றி இயக்​குநர் சக்தி ராஜசேகரன் கூறும்​போது, “இது த்ரில்​லர் படம் என்​றாலும் இது​வரை பார்க்​காத வகை​யில் இருக்​கும். ஹோம் கார்டு பின்​னணி​யில் கதை உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

          

ஹோம் கார்​டாக இருக்​கும் ஒரு​வர் எப்​படி ஒரு விஷயத்தை புல​னாய்வு செய்​கிறார் என்று கதை போகும். இந்​தப் பின்​னணி புது​மை​யாக இருக்​கும். கதை​யில் சமூகப் பிரச்​சினை ஒன்​றை​யும் பேசுகிறோம். பட ரிலீஸுக்கு பிறகு அது பெரிய வி​வாத​மாக மாற வாய்ப்பிருக்கிறது.

அடுத்த மாதம் படப்​பிடிப்பை தொடங்க இருக்​கிறோம். மலை​யாள நடிகை அனு​மோள் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார்​. படத்​தில் பாடலும் ஹீரோ​யினும்​ இல்​லை. இந்தக்​ கதைக்​கு அது தேவை​யாக இல்​லை” என்​றார்​.

SCROLL FOR NEXT