தமிழ் சினிமா

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

நிலா

தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு தரப்பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. விசா​ரித்த தனி நீதிபதி தணிக்கை சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டார்.

அதை எதிர்த்து தணிக்கை வாரி​யம் தாக்​கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி அமர்​வு, தனி நீதிபதியின் உத்​தரவை ரத்து செய்​தனர். மேலும், படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பிய தணி்க்கை வாரி​யத்​தின் உத்​தரவை எதிர்த்து படத்​ தயாரிப்​புக் ​குழு மீண்​டும் தனி நீதிப​தியை நாடவும், தனி நீதிபதி இரு தரப்​புக்​கும் போதிய அவகாசம் அளித்து விசா​ரிக்​க​வும் உத்தர​விட்​டனர்.

          

இப்​படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பியது தொடர்​பாக நேரடி​யாக தணிக்கை வாரி​யத்​தையே நாட​வுள்​ள​தால், வழக்கை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக படத்​த​யாரிப்பு தரப்​பி்ல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் ஜனநாயகன் படத்​துக்​குத் தணிக்கை சான்​றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்​கைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

பின்​னர் இப்​படம் மறு​தணிக்​கைக்கு அனுப்​பப்​பட்​டது. மார்ச் 17-ல் மறு ஆய்​வுக் குழு​வினர் படத்​தைப் பார்த்​தனர். தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு தேர்​தல் விதி​கள் நடைமுறையில் இருப்​ப​தா​லும் படத்​தில் அரசி​யல் வசனங்​கள் இடம் பெற்றுள்ளதாலும் படத்​தைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு மறு ஆய்வு குழு பரிந்​துரை செய்​துள்​ள​தாகக் கூறப்​பட்​டது. இந்நிலையில் ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யீடு தொடர்​பாக புதிய தகவல் வெளி​யாகி​யுள்​ளது. அதன்​படி ஜூலை மாதம் இப்படம் வெளி​யாக வாய்ப்​பிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

கேவிஎன் நிறு​வனம் தயாரிப்​பில் யாஷ் நடித்​துள்ள ‘த டாக்​ஸிக்’ படம் மார்ச் மாதம் வெளி​யாக இருந்​தது. ​படத்தை ஜூன் 4-ம் தேதிக்​குத் தள்ளி வைத்​தனர். அதன் வெளி​யீட்​டில் கவனம் செலுத்த இருக்​கும் இந்​நிறு​வனம், அப்​படம் வெளி​யான பிறகே ‘ஜன​நாயகன்’ படத்​தில்​ கவனம்​ செலுத்​தும்​ என்​று செய்​தி​கள்​ வெளி​யாகி​யுள்​ளன. படக்​குழு தரப்​பில்​ அதி​காரப்​பூர்​வ அறி​விப்​பு வெளி​யாகவில்​லை.

SCROLL FOR NEXT