ஏ.ஆர்.சுரேஷ் பாபு இயக்கி நடிக்கும் படம், ‘இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி’.
இதில் எம்.சதீஷ்குமார், சோனியா தாஸ், நிஷா, வினோத், தீபா சங்கர், அசோக் பாண்டியன், பெஞ்சமின், ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளனர். ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ்.கே இசையமைக்கிறார்.
வி.கே.வி.பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வடிவேலன் பி.ஜே. விமல்ராஜ் சிவசாமி தயாரித்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
“மதுவால் ஏற்படும் விபத்துகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொல்லும் படம் இது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகிறது” என்றது படக்குழு.